ஒரு விவசாயின் கதை – குட்டி ஸ்டோரி -32
ஒரு விவசாயி குடும்பம் கிராமத்தில் வாழ்ந்து வந்தது. அவர் மிகவும் நேர்மையானவர், ஆனால் அவருக்கு போதிய வருமானம் இல்லாமல் இருப்பவர். தனது கடின உழைப்பால் நாள் தோறும் ஓடிக்கொண்டுருப்பவர் .
அவருடை மனைவி தினமும் ராமுவிடம் சண்டை போடுவாராம் இரண்டு பிள்ளைகள் இருக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் இருக்கீங்க அப்படினு திட்டுவாங்களாம். ஆனால் ராமு அதை எல்லாம் காதில் வாங்கி கொள்ளாமல், வழக்கம்போல் வேலைக்கு கிளம்பிவிடுவார், அன்றைக்கு வேலை முடித்திவிட்டு வரும் வழியில் அவரது நெருங்கிய நண்பர் எதிரில் வருவதை பார்த்தார்.
இரண்டுபேரும் மிகவும் மகிழ்ச்சியோட பேசிக்கொண்ட்ருந்தனர், ஏன் இன்னும் விவசாயம் செய்து கொண்டுதான் இருக்கிறியா, அதில் உனக்கு லாபம் வருகிறதா என்று கேட்டுள்ளார். லாபம் வரவில்லை அதனால தான் என் மனைவியும் தினமும் என்னுடன் சண்டை போடுகிறாள், ஆனால் என்ன செய்வது என் தலையில் கடவுள் இப்படி எழுதிர்கிறார். என்று அந்த விவாசயி கவைலையுடன் கூற,
அதற்கு அவரது நண்பர் நீ என்னுடைய பையன் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து கொள்கிறாயா, என்று கேட்டுள்ளார். ஆனால் எனக்கு விவசாயம் தான் தெரியும் அதை வைத்து தான், நான் பிழைக்கின்றேன் அப்படினு சொன்னாராம் அந்த விவாசயி அப்போம் நீ அதில் லாபம் ஈட்டுவதற்கு நான் ஒரு வலி சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.
புரியாத புதிர்.. பெண் வடிவில் நதியா..? இதையும் படிங்க
நீ காய்கறிகளை அதிக விலைக்கு விற்றல் மட்டும் தான் உனக்கு லாபம் கிடைக்கும். என அவருடைய நண்பர் சொல்ல, அதற்கு ராமு ஏழைகள் அனைவரும் என்னிடம் வந்துதான் காய்கறி வாங்கி செல்கிறார்கள் நான் விலை அதிகப்படுத்தினால் அவர்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள் என கூறினாராம்.
அதற்கு அவரது நண்பர் இப்படி இருந்தால் நீ கஷ்டப்பட்டுக்கொண்டு தான் இருக்க வேண்டும். அப்படினு சொல்லிட்டு போய்ட்டாராம். ஆனால் அந்த விவாசயி கடவுள் மேல் பாரத்தைப் போட்டு விட்டு என்றாவது ஒரு நாள் இந்த நிலை மாறும் என நினைத்து கொண்டு மறுநாள் வியாபாரத்தை தொடங்கியுள்ளார்.
மீண்டும் மறுநாள் வேலை தொடங்கியபின் ஒரு பெரிய உணவக முதலாளி, ராமு குறைந்த விலைக்கு காய்கறி விற்பனை செய்ததால், அவருக்கு தேவையான காய்கறிகளை வாங்கி கொண்டும், இனி வருடம் முழுவதும் உணவகத்திற்கு தேவையான அனைத்து காய்கறிகளையும் சப்ளை செய்யும் படி ஆர்டர் கொடுத்து பணம் கொடுத்துள்ளார். அதன் பின் விவசாயி ராமும் அவர் நினைத்த படி நல்ல நிலைக்கு வந்தார்.
கதையின் கருத்து : நாம் மட்டும் நல்லா வாழ்ந்த போதும் என்றும் எண்ணாமல் அடுத்தவரும் நல்லா வாழ வேண்டும் என நினைத்தால் வாழ்க்கை மாறும்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..