கலவை காட்டேரிக்கு இரவில் நடத்தப்பட்ட வினோத வழிபாடு…!!
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள பென்னகர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ காட்டேரியம்மனுக்கு கருப்பாடை உடுத்தி மஞ்சள், குங்கும் வைத்து வெகு விமரிசையாக வினோத திருவிழா நடைபெற்றது.
இத்திருவிழாவானது உலக நன்மைக்காவும், பொதுமக்கள், கால்நடைகள், நோய்நொடியின்றி வாழவும், விவசாயம் செழிக்கவும், மழை வேண்டியும் பல ஆண்டுகளாக இத் திருவிழா நடைபெற்று வருகிறது சுமார் 500 வருடங்களுக்கு முன் ஊரில் பலருக்கு நோய்வாய்ப்பட்டு இறந்து உள்ளனர்.
அப்போது காட்டேரியம்மனுக்கு கலி மண்ணால் உருவம் பிடித்து மஞ்சள், குங்குமம் வைத்து திருவிழா செய்து வழிபட்டதோடு அந்த மண்ணை எடுத்து உடலில் பூசி வழிபட்டால் நோய் குணமடையும் என்பது அவர்களது நம்பிக்கை என கிராம மக்கள் நம்பிக்கையுடன் இத்திருவிழாவை நடத்தி வருகின்றனர்.
திருவிழா துவக்கத்திற்கு முன் ஊர் பொதுமக்கள் தங்கள் நிலத்தில் விளைந்த தானியங்களை காணிக்கையாக எடுத்து வைத்தும் பொங்கல் வைத்தும் படையல் இட்டு கோழி, ஆடு ஆகியவை பலியிட்டு வழிபாடு செய்தனர்.
அதனை தொடர்ந்து பம்பை உடுக்கை மூலம் பாடல் பாடி வழிபட்டபோது ஆக்ரோசமாக பெண்களின் மீது வந்த காட்டேரியம்மன் ஊரையும் மக்களையும் கட்டிகாப்பேன் என வாக்குறுதியும் கொடுத்தது. இத்திருவிழாவில் பென்னகர் சுற்றியுள்ள மாம்பாக்கம், வேம்பி, தோனிமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொது மக்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..