ஆண்மையை அதிகரிக்க இதை சாப்பிடுங்க..!
-
பனங்கிழங்கு இயற்கையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த சத்தான ஒரு கிழங்கு வகை. இதில் நார்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. இந்த கிழங்கை சாப்பிடும்போது செரிமானம் சீராகிறது, மலச்சிக்கல் குணமாகிறது.
-
பனங்கிழங்கில் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால் இது நீண்ட நேரத்திற்கு பசி உணர்வை தராது.
-
பனங்கிழங்கில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. ஹீமோகுளோபின் குறைவாக இருப்பவர்களுக்கு இது உதவியாக இருக்கும்.
-
மேலும் பனங்கிழங்கில் கால்சியம் சத்து அதிகமாக காணப்படுகிறது இதனால் எலும்புகளுக்கு வலுவூட்டுகிறது. இதனால் எலும்பு முறிவு, எலும்பு அரிப்பு ஆகிய பிரச்சனைகள் வராது.
-
புரதச்சத்து பனங்கிழங்கில் நிறைந்திருக்கிறது , புரதம் தேவை இருப்பவர்கள் இதனை சாப்பிடலாம்.
-
ஆண்மையை அதிகரிக்கக்கூடிய சக்தி பனங்கிழங்கிற்கு உண்டு. இது விந்து எண்ணிக்கையை பெருக்குகிறது. அதன் வீரியத்தையும் அதிகரிக்கிறது.
-
பெண்களுக்கு கருப்பை வலுவூட்ட பனங்கிழங்கை வேக வைத்து அதனை பொடித்து பனவெல்லம் சேர்த்து சாப்பிடலாம்.