கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மயிலாடும்பாறை பகுதிக்குள் புலி ஒன்று வந்துள்ளது. பின்னர், அங்கிருந்த நாயை வேட்டையாட விரட்டியுள்ளது. நாய் தப்பிஓட முயற்சிக்கையில், அருகிலுள்ள கிணற்றில் விழுந்து விட்டது. அதை , பின் தொடர்ந்து ஓடிய புலியும் கிணற்றுக்குள் விழுந்தது. அதுவரை, நாயை வேட்டையாட ஆக்ரோஷத்துடன் இருந்த புலி கிணற்றுக்குள் விழுந்து விட்டதால், உயிர் பயத்தால் சாதுவாகி விட்டது. கிணற்றுக்குள் அருகருகே படுத்திருந்தன. புலி கிணற்றுக்குள் வைத்து நாயை வேட்டையாடவும் முயற்சிக்கவில்லை.
கிணற்றுக்குள் இருந்து புலி உறுமும் சத்தம் நாய் குரைக்கும் கேட்டு தோட்ட தொழிலாளர்கள் உள்ளே எட்டி பார்த்துள்ளனர். அப்போது, உள்ளே புலியும், நாயும் அருகருகே இருப்பதை கண்டு வியப்படைந்தனர். தொடர்ந்து, பெரியார் வைல்டு லைப் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து வந்த கால்நடை மருத்துவர்கள் முதலில் புலிக்கு மயக்க ஊசி செலுத்தி அதை தூக்கி மேலே கொண்டு வந்தனர். கூண்டில் அடைக்கப்பட்ட புலி பெரியார் வன சரணாலாயத்தில் அடர்ந்த வன பகுதியில் விடப்பட்டது. அடுத்ததாக, நாயும் மீட்கப்பட்டது.
கிணற்றுக்குள் நாயுடன் புலி அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.