இரவில் குளித்துவிட்டு தூங்குவதால் கிடைக்கும் நன்மைகள்..!
நமக்கு இரவில் உறக்கம் என்பது மனதுக்கும் உடலுக்கும் மிகவும் முக்கியமானது. இரவில் உறங்குவதற்கு முன் எடுக்கும் சில நடவடிக்கைகள் உடலுக்கு எவ்வளவு நன்மை அளிக்கும் என்பது நமக்கு தெரியாது. அதுபோல இரவில் குளித்துவிட்டு தூங்குவது என்பது நமது தூக்கத்தை மேம்படுத்துவதுடன் உடலுக்கும் நன்மை அளிக்கும்.
இரவில் குளிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
நன்மைகள்:
- இரவில் குளிர்ந்த நீரில் குளிப்பதினால் உடல் வெப்பநிலை குறையும். இதனால் உடலில் வெப்பம் குறைவதினால் நல்ல ஆழமான தூக்கம் வரும்.
- நாள் முழுவதும் நாம் பல்வேறு விதமான வேலைகளில் ஈடுபடுவோம் அப்போது நமது தசைகள் இறுக்கமாக இருக்கும். இதனால் இரவில் குளிர்ந்த நீரில் குளிப்பதினால் அந்த இறுக்கம் தளர்ந்து, உடலை நிம்மதியாக உறங்க வைக்கும்.
- இரவில் குளிர்ந்த நீரில் குளிப்பதினால் மன அழுத்தமானது குறையும், இதனால் மனதில் ஒரு வித அமைதியானது ஏற்படும். இரவில் நல்ல தூக்கமும் வரும்.
- இரவில் குளிப்பதினால் சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும். இதனால் முகத்தில் இருக்கும் அழுக்குகள், இறந்த செல்கள் மற்றும் எண்ணெய் பசை நீங்கி சருமம் புத்துணர்ச்சியாக இருக்கும்.
- இன்சோம்னியா என்ற தூக்க கோளாறுகளால் அவதிப்படுபவர்களுக்கு இரவில் குளித்துவிட்டு உறங்குவதினால் நல்ல உறக்கம் வரும்.
இரவில் குளிப்பதினால் தூக்கம் நன்றாக வரும் என்பது இருந்தாலும் சில தீமைகளும் உள்ளது. இரவில் நீண்ட நேரம் குளிப்பதினாலும் உடல் அதிக வெப்பமாகும். இதனால் இரவில் தூக்கம் கலைந்து அடிக்கடி தூக்கத்திலிருந்து எழும் நிலை வரும். அதிகபடியான குளிர்ந்த நீர் அல்லது சூடான நீரில் குளிக்கும்போது அது உடலில் சொரி, அரிப்பு போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.
இரவில் குளிப்பது நமது உடல் மற்றும் மனதிற்கு நன்மை தரும் என்றாலுல் அது எல்லாருக்கும் பொருந்தும் என்பது இல்லை. எனவே இரவில் குளிப்பது உங்களின் உடலுக்கு ஏற்றதாக இருக்குமா என்பதை பார்த்து குளிப்பது மிகவும் நல்லது.
