உலக பார்வையற்றோர் கிரிக்கெட் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தூத்துக்குடி இளைஞர்
லண்டனில் நடைபெற்ற உலக பார்வையற்றோர் கிரிக்கெட் போட்டியில் இந்திய சார்பில் பங்கேற்ற தூத்துக்குடி சேர்ந்த இளைஞர் மகாராஜன் என்பவர் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்ற பார்வையற்றோர் கிரிக்கெட் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று திரும்பிய தூத்துக்குடி இளைஞர் மகாராஜன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்தித்து பேசினார்.
முதன் முதலாக பார்வையற்றோர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சேர்க்கப்பட்டு அதில் பதக்கம் வென்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்த அவர், தன்னை ஊக்கம் அளித்து, உதவி செயத தூத்துக்குடி எம்பி கனிமொழி அவர்கள் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.
மேலும், பார்வையற்றோர்கான கிரிக்கெட் மைதானங்கள் அமைத்து தர வேண்டி தமிழக அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..