கரூரில் சர்வதேச இளைஞர் தினத்தை ஒட்டி மாரத்தான் போட்டி..!!
சர்வதேச இளைஞர் தினத்தையொட்டி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சார்பில் கரூரில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமை தாங்கி, கொடியசைத்து போட்டியை துவக்கி வைத்தார்.
இந்த மாரத்தான் போட்டியில் இளைஞர்களுக்கு இடையே HIV மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், போதை மருந்து பழக்கம் விழிப்புணர்வு ஏற்படுத்தல,நல்ல பழக்கங்கள் மாணவர்களுக்கிடையே ஏற்படுத்த வகையில் இந்த மாரத்தான் விழிப்புணர்வு போட்டி நடைப்பெற்றது.
சுமார் 250 மாணவ மாணவியர் பங்கேற்ற மாரத்தான் போட்டியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி அரசு கலைக் கல்லூரி,மில்கேட் வழியாக சென்று மீண்டும் மாவட்ட விளையாட்டு அரங்கில் முடிவடைந்தது.
போட்டியாக மட்டும் பார்க்காமல் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக மாரத்தானில் ஓடிய அனைத்து மாணவர்களையும் பாராட்டி மாவட்ட ஆட்சியர் சான்றிதழ்களை வழங்கினார்.
மேலும் இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் மெடல் அணிவித்து, ஊக்க தொகையும் கொடுத்துள்ளனர்.
Discussion about this post