பாரதிராஜாவின் இந்த படைப்பு..!! மீண்டும் திரையில்..!!
பாரதிராஜா என்றாலே கிராமும் மண் வாசனையும் நம் நினைவிற்கு வரும் அவர் எடுத்த பல படங்கள் ஹிட் கொடுத்துள்ளது.., அதிலும் ஒரு சில படங்களை திரும்ப திரும்ப பார்க்க வைக்கும்.., அவர் எடுக்கும் படங்கள் ஒரு கதை என்று சொல்வதை விட படைப்பு என சொல்லலாம். அப்படி அவர் படைத்த படைப்பு ஒன்று மீண்டும் திரையில் வெளியாக உள்ளது.
1985ம் ஆண்டு பாரதி ராஜா தயாரிப்பில் வெளியான படம் தான் “முதல் மரியாதை” இதில் நடிகையர் திலகம் சிவாஜி கணேசன், நடிகை ராதா, வடிவுக்கரசி, சத்யராஜ் நடித்திருப்பார்கள்.., சில புது முகங்களாக தீபன், ரஞ்சினி, அருணா, ஜனகராஜ், வீராசாமி உட்பட பலரையும் அறிமுக படுத்தியிருப்பார்.
இந்த படத்தில் வரும் கதை பல 65 ஆண்டுகளுக்கு முன் நடக்கப்பட்ட ஒரு சிறு நிகழ்வை கொண்டு பாடமாக உருவாக்கப்பட்டது.
அதாவது ஒரு வயதான நபர் மீது வயசு பெண் திருமணம் செய்துக்கொள்ள ஆசைப்பட்டு அவரை திருமணம் செய்துக்கொள்ளும் போது ஊரே எதிர்த்து நிற்கும் அந்த கதையை மாற்றி இயக்குனர் பாரதிராஜா மற்றும் செல்வராஜ் இயக்கி இருப்பார்கள்.
ஊரே ஒரு மனிதரை வணங்குவதும்.., அவருக்கு மரியாதை கொடுப்பதும் வழக்கம்.., அப்பேர் பட்ட மலைச்சாமி என்ற பஞ்சாயத்து தலைவரை அவரின் நெருங்கிய நண்பர் மரணபடுக்கையில் இருக்கும் போது தனது தங்கையை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்கிறார்..
மலைச்சாமியும் அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் திருமணம் செய்து கொள்கிறார்.., ஆனால் மலைச்சாமி மணந்து கொண்ட பொன்னாத்தா அவரை மரியாதை குறைவாக நடத்துவார்.., ஆனால் நண்பருக்கு செய்து கொடுத்த சத்தியத்திற்கு கட்டுப்பட்டு அந்த குடும்பத்துடன் வாழ்வார்.
18 வருடங்கள் கழித்து அந்த கிராமத்திற்கு குயிலி அவளது அப்பாவுடன் வேலை தேடி வருகிறாள்.., அப்போது மலைச்சாமி குயிலுக்கு படகு ஓட்டும் வேலையை கொடுக்கிறார்.
மலைச்சாமியின் பேச்சு செயல், அவர் வாழும் வாழ்க்கையை பார்த்து குயிலி அவர் மீது ஆசைப்படுவாள் ஆனால் மலைச்சாமி அதை மறுத்து விடுவார்.., தினமும் குயிலியின் கையால் சாப்பிட ஆசைப்பட்ட நம்ப மலைச்சாமி அந்த ஒரு பழக்கத்தை மற்றும் மாற்றிக்கொள்ளவில்லை.
இந்த விஷயம் நம்ப பொன்னாத்தாவிற்கு தெரிய வர.., கிராம மக்களுடன் வந்த குயிலை தரக்குறைவாக பேசி அவளை ஊரை விட்டு அனுப்ப முயற்சிக்கிறார் அதே சமயம் மாளிச்சாமியின் மகளின் கணவர் ஒரு பெண்ணை கெடுத்து கொலை செய்து விட்டு ஒன்றும் தெரியாது போல இருப்பார்.
அதன் உண்மைகள் மலைச்சாமிக்கு தெரிய வர போலீசில் பிடித்து கொடுக்கிறார்.., அதே சமயம் குயிலியை சந்திக்க செல்லும் போது அங்கே அவள் இல்லை.., குயிலியை போலீஸ் பிடித்து கொண்டு போவதாக மலைச்சாமிக்கு தெரிய வர அவளை சந்தித்து நடந்தது பற்றி கேட்கிறார்.
ஒரு படம் என்றால் அதில் ட்விஸ்ட் இல்லாமல் எப்படி..? பொன்னாத்தா நடந்து கொண்டதை நினைத்து சோகத்தில் இருந்த குயிலியிடம் ஒரு ஆண் வந்து படகில் செல்ல வேண்டும் என கேட்கிறார்.., படகை ஓட்டி கொண்டு வரும் போது அந்த நபர் ஒரு பொண்ணை பற்றி வர்ணித்து பேசுவார்.., அதில் கடுப்பான குயிலி அந்த ஆணை படகு ஓட்டும் துடுப்பால் அடித்து கொலை செய்து விடுவார்.
அவர் யார் என்று பார்த்த போது தான் தெரியவரும் அவர் பொன்னாத்தாவின் முன்னாள் கணவர் என்றும் அவர் பேசியது பொன்னாத்தாவை பற்றியும் என்று..
ஒரு படத்தில் பாடல் என்றால் ஒரு சில பாடல்கள் ஹிட் கொடுத்திருக்கும் ஆனால்.., ஒரு சில பாடல்கள் flop ஆகியிருக்கும் ஆனால் இந்த படத்தில் அனைத்து பாடல்கள் ஹிட் கொடுத்தாலும் இந்த பாடலில் வரும் வரிகளுக்கு நிகர் எதுவும் இல்லை..
இசைஞானி இளையராஜா இசையில் வைரமுத்துவின் பாடல் வரிகளில்.., மலேசியா வாசுதேவன் மற்றும் s.ஜனாகி பாடிய பூங்காற்று திரும்புமா இந்த பாடல்..
“மெத்த வாங்குன.. தூக்கத்தை வாங்கல
இந்த வேதனை யாருக்கு தான் இல்லை”
“உள்ள அழுகுறன் வெளிய சிரிக்கிறேன்..
நல்ல வேஷம் தான் வெளுத்து வாங்குறன்”
இந்த பாடல் வரிகள் யாருக்கு வேண்டுமானாலும் பொருந்தும் என சொல்லலாம்..
1985ம் ஆண்டு வெளியான இந்த “முதல் மரியாதை” திரைப்படம் 200 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.., மீண்டும் இது போன்றா படங்கள் வருமா என எதிர் பார்த்தபோது.., இதே படம் தற்போது ரீ ரிலீஸ் செய்ய போவதாக தகவல் வெளியாகியுள்ளது.., ஆனால் தேதி இன்னும் முடிவு செய்யவில்லை என்பது குறிப்பிட தக்கது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..