ADVERTISEMENT
முகலாயர்களின் டேஸ்டியான கிமாமி சேமியா எப்படி செய்யலாம்னு பார்க்கலாம்..!
கிமாமி சேமியா ரெசிபி முகலாயர்களின் ரெசிபி ஆகும். முகலாயர்களால் ஈத் பெருநாளில் செய்யக்கூடிய இனிப்பு வகை ரெசிபியில் இது ஒன்றாகும்.
தேவையான பொருட்கள்:
சேமியா- 200 கிராம்
சர்க்கரை- 200 கிராம்
நெய்- 50 கிராம்
ஏலக்காய் தூள்- ஒரு ஸ்பூன்
முந்திரி, ஏலக்காய், பிஸ்தா தேங்காய்- ஒரு ஸ்பூன்
திராட்சை- ஒரு ஸ்பூன்
பால்கோவா- 100 கிராம்
ஒரு காடாயை அடிப்பில் வைத்து சூடு செய்து அதில் 50 கிராம் அளவு நெய் விட்டு சூடு ஆனதும் அதில் முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா, ஆகியவற்றை போட்டு பொன்னிறமாக வறுத்து தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின் அதே நெய்யில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய தேங்காயை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் கொஞ்சம் நெய் விட்டு அதே கடாயில் எடுத்து வைத்துள்ள சேமியாவையும் சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின் ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எடுத்து வைத்துள்ள சர்க்கரையை போட்டு அது மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு பின் தண்ணீர் கொதிக்கும் சமையத்தில் அதில் வறுத்து வைத்துள்ள பொருட்கள் மற்றும் ஏலக்காய்தூள் சேர்த்து கலக்க வேண்டும்.
பிறகு வறுத்து வைத்துள்ள சேமியாவையும் சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும். பின் சேமியா நன்றாக வெந்து அக்கலவை கெட்டியானதும் அதில் பால்கோவாவை சேர்த்து நன்றாக கிளறி இறக்கினால் டேஸ்டியான முகலாயர்களின் கிமாமி சேமியா தயார்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)