இந்த பூக்களை மட்டும் தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்து விடாதீர்கள்..!!
இயல்பாகவே கோவிலுக்கு சென்று அங்குள்ள பூக்களை வாங்கி இறைவனுக்கு அர்ச்சனை செய்வது அல்லது அபிஷேகம் செய்வது வழக்கம்.., ஆனால் ஒரு சில தெங்வங்களுக்கு இந்த சில பூக்களை மட்டும் தான் அர்ச்சனைக்கு எடுத்துக்கொள்வார்கள் ஒரு சில பூக்களை எடுத்துக்கொள்ள மாட்டார்கள்..
ஏன் அப்படி செய்யப்படுகிறது.., எந்த தெய்வத்திற்கு என்ன வகையான பூக்கள் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்..
எந்த தெய்வத்திற்கு நாம் மலர்களை கொண்டு அர்ச்சனை செய்தாலும், முழு பக்தியுடனும் உள்ளன் போடும் அர்ப்பணிப்போடு அர்ச்சனை செய்தால் மட்டுமே இஷ்ட தெய்வத்திற்கு ஏற்புடன் இருக்கும்..
சிவபெருமானுக்கு சாதாரண நாட்களில் தாழம்பூவினால் அர்ச்சனை செய்யக் கூடாது. ஆனால் சிவராத்திரி தினத்தில் மட்டும் தான் சிவனுக்கு தாழம்பூவினால் அர்ச்சனை செய்யலாம்.
எப்பொழுதும் சிவனுக்கு வில்வ இலையினால் அர்ச்சனை செய்தால் நாம் செய்த பாவங்கள் நீங்கி விடும். என்பது ஐதீக உண்மை..
அம்பிகை அம்மனுக்கு அறுகம் புல் கொண்டு அர்ச்சனை செய்யக் கூடாது.

லட்சுமி தேவிக்கு தும்பை மலர் கொண்டு அர்ச்சனை செய்யக் கூடாது.
துர்கை அம்மனுக்கு அறுகம் புல் கொண்டு அர்ச்சனை செய்யக் கூடாது.
சூரிய பகவானுக்கு வில்வம் இலை கொண்டு அர்ச்சனை செய்யக் கூடாது.
சரஸ்வதி தேவியாருக்கு பவள மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்யக் கூடாது..
கால பைரவரருக்கு மல்லிகை பூக்கள் கொண்டு அர்ச்சனை செய்யக் கூடாது.
இதையும் படிக்க மறக்காதீங்க.. குழந்தை இல்லையா..? அதுவும் கடவுள் சித்தம்..! பெரியவா சொன்னது..!
– லோகேஸ்வரி.வெ