அண்ணாமலையின் பாதையாத்திரையில் குறுக்கே வந்த காட்டெருமையால் பதற்றம் நிலவியது.
தமிழகத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைப்பயணத்தில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்தார்.
பின்னர் அண்ணாமலையின் யாத்திரை கொடைக்கானல் நகர சாலைகளில் சென்ற போது திடீரென காட்டெருமை உள்ளே நுழைந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாஜகவினர் அப்பகுதியில் இருந்து தலை தெறிக்க சிதறி அடித்து ஓடினர். இதனால் அந்த இடமே பெரும் பரபரப்பாக காட்சி அளித்தது.
இது சம்பந்தமான வீடியோ இணையத்தில் வெளியாகி வருகிறது. இதைப் பார்த்த இணையதளவாசிகள் ட்ரோல் செய்து வருகின்றன.