வீட்டில் விளக்கு ஏற்றுவது ஏன் தெரியுமா..?
விளக்கு ஏற்றும் வழிமுறை , மிக முக்கியமான ஒன்று விளக்கு ஏற்றுவதால் நமது வீடு தெய்விகப் பேரொளியாகவும், லட்சுமி கடாட்சம் நிறைந்ததாக இருக்கும் என்பது ஐதீகம்.
பெண்கள் காலையில் எழுந்ததும் விளக்கேற்றி இஷ்ட தெய்வத்தை வணங்கி வழிபட்டால், மனதில் உற்சாகமும் செயலில் ஒரு உத்வேகமும் பிறக்கும்.
சிவ பெருமானின் மகரிஷிகள் யாகங்களையும், ஹோமங்களையும் செய்து இறைவனை வழிபட்டனர். இப்போது இதுவே எளிமையாக்கப்பட்டு சகலரும் தங்களது அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்கும் விதமாக விளக்கு ஏற்று வழிபாடு, திருவிளக்கு பூஜை என செய்யப்படுகிறது.
இறைவனை ஜோதி வடிவில் வழிபாடு செய்தால், மனித வாழ்வில் தூய்மையும் தெய்வத்தன்மையும் பெருகும். “காஸ்மிக் பவர்” என சொல்லப்படும் பிரபஞ்ச சக்தியை கிடைக்கும்.
விளக்கு வழிபாடு சுற்றுப்புற இருளைப் போக்குவதோடு, மனதின் இருளை நீக்கி. விளக்கின் சுடரொளியில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதியும் எழுந்தருளுவார்கள் என்பது ஐதீகம்.
எனவே தான் விளக்கேற்றி இறைவனை வழிபாடு செய்தால், முப்பெரும் தேவியரின் திருவருளும் ஒன்றாகப் பெறலாம்.
விளக்கில் பசு நெய் கொண்டு, பஞ்சு திரியிட்டு விளக்கேற்றுவது நல்லது. பசுநெய் தீபத்தில் அம்பாள் வாசம் செய்வதாக ஐதீக வரலாறு சொல்லுகிறது, அதை ஏற்றும் பொழுது “சிவமாகிய ஜோதியுடன்” இணைந்து சிவசக்தி சொரூபமாகிறது.
தினமும் வீட்டில் விளக்கு ஏற்றி வழிபட்டால்.., இல்லங்களில் தெய்வபலம் பெருகுவதால், தீய சக்திகள், செய்வினைகள், திருஷ்டிகள் எதுவும் அணுகாது. என்பது ஐதீக உண்மை.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..