நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நாளே அனிதாவுக்கு உண்மையாக அஞ்சலி செலுத்தும் நாள் என முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர், மாணவர்களுக்கு லேப்டாப், பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கினார்.
கொளத்தூர் தொகுதிக்கு ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக வரும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னை தொடர்ச்சியாக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கும் தொகுதி கொளத்தூர் தொகுதி தான். அப்படிப்பட்ட இந்த தொகுதிக்கு நான் எத்தனை முறை வந்தாலும் எனக்கு திகட்டாது.
மேலும் மாணவர்களுக்கு உதவக்கூடிய வாய்ப்பும் கிடைக்கும் போது அந்த மகிழ்ச்சி இன்னும் அதிகமாகிறது. நான் அமைச்சர் சேகர் பாபுவை செயல் பாபு என்று அழைப்பதுண்டு. அவர் இந்த நிகழ்ச்சி மட்டுமல்ல, அனைத்து நிகழ்ச்சிகளையும் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார். அப்படி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
நீட் தேர்வு என்ற கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நாளே அனிதாவுக்கு உண்மையாக அஞ்சலி செலுத்தும் நாள். மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் பெண்களுக்கு உரிமையை வழங்குகிறோம். மகளிர் உரிமைத் தொகையின் மூலம் 1கோடி பேர் பயன்பெறுவார்கள் என தெரிவித்தார்.
இதையும் படிக்க: அடேங்கப்பா.. என்னா வேகம்.. பாதையாத்திரையில் குறுக்கிட்டு பாஜகவை பதற வைத்த காட்டெருமை..!