மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். அடுத்தவர்களின் பிரச்சனையை புரிந்து கொண்டு தானாக சென்று உதவி செய்யும் மனப்பக்குவமும் இருக்கும். பெற்றவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள். சொந்தத் தொழிலை முன்னேற்றுவதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்கும். எந்த ஒரு சின்ன பிரச்சனை என்றாலும் உடனே முன்கோபம் வரும். அடுத்தவர்களை திட்டும் அளவுக்கு கொந்தளித்து விடுவீர்கள். பொறுமையாக இருப்பது ரொம்ப ரொம்ப முக்கியம். வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்கவும். கோபத்தில் எடுக்கக்கூடிய முடிவு சரியானதாக இருக்காது.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு பொறுமையாக இருக்க வேண்டும். எதிரிகளோடு சண்டை போடக்கூடாது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். யாராவது உங்களை சீண்டி விட்டால் கூட, அடுத்தவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டு ஆடவே கூடாது. ஜாக்கிரதையாக இருந்துக்கோங்க. வம்புக்கு வலிக்க நாலு பேர் கட்டாயம் வருவாங்க.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு வேலைகள் பட்டியலில் நின்று கொண்டு இருந்தாலும், பம்பரம் போல சுழன்று வரிசையாக எல்லா வேலையையும் முடித்து விடுவீர்கள். சுறுசுறுப்புக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் எந்த குறைபாடும் வராது. மன உறுதி உங்களை உயர்த்தி நிற்க வைக்கும். வேலை செய்யும் இடத்திலும் சொந்தத் தொழில் இன்னும் நல்ல உற்சாகம் இருக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு புது மனிதர்களின் சந்திப்பு மன நிறைவை கொடுக்கும். புதிய அனுபவங்களை கற்றுக் கொள்வீர்கள். குடும்பத்தோடு நேரத்தை அதிகமாக செலவழிப்பீர்கள். வீட்டிற்கு தேவையான சில ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ வாய்ப்புகள் உள்ளது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வண்டி வாகனம் பழுது பார்க்க இன்று உகந்த நாள்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு மனநிறைவான நாளாக இருக்கப் போகின்றது. நீங்கள் செய்யும் வேலை உங்களுக்கு திருப்தியை கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். சந்தோஷமான சூழ்நிலை நிலவும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். விவசாயிகளுக்கு இன்றைய தினம் மகிழ்ச்சி தரக்கூடிய நாளாக அமையும்
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு கொஞ்சம் சிக்கல் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை நாளை தள்ளி போடவும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் இழுபறியாக அமையும். முன்பின் தெரியாதவர்களுக்கு கடன் கொடுக்க வேண்டாம். மற்றபடி சொந்த தொழிலும் வேலை செய்யும் இடத்திலும் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்தால் பிரச்சனையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு எல்லா விஷயத்திலும் கொஞ்சம் விட்டுக் கொடுக்க வேண்டும். அடம் பிடித்துக் கொண்டு இதைத்தான் செய்வேன் என்று ஒற்றைக்காலில் நிற்கக் கூடாது. பிரச்சனைகளை சுலபமாக வேண்டும் என்றால் கொஞ்சம் அட்ஜஸ்ட்மென்ட் தேவை என்பதை புரிந்து கொள்ளுங்கள். உயர் அதிகாரிகள், மேல் பதவியில் இருப்பவர்களை எதிர்த்து பேசுவதன் மூலம் சின்ன சின்ன எதிர்ப்பு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு வரவு நிறைந்த நாளாக இருக்கும். வாரா கடன் வசூல் ஆகும். சின்ன சின்ன அன்றாடம் தொழில் செய்யக்கூடிய தொழிலாளர்களுக்கு நல்ல வரவு இருக்கும். தொழிலை முன்னேற்றுவதற்கு தேவையான ஐடியாக்கள் கிடைக்கும். முன்னேற்றம் நிரைந்த இந்த நாளில் சந்தோஷம் பெருகும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு கொஞ்சம் ஓய்வு தேவை. ரொம்பவும் வேலை செய்து டையாட் ஆக கொள்ள வேண்டாம். உடல் உபாதைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மனசோர்வு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏதேனும் பிரச்சனை என்றால் உடனே மருத்துவரை அணுகவும். தேவையில்லாத குழப்பங்களை மனதில் இருந்து குப்பையில் தூக்கி போடுங்கள் நிம்மதி பெறுவீர்கள்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு எல்லா விஷயத்திலும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேனிலும் விஷம் கலந்திருக்கும் என்ற சந்தேக கண்ணோடு பார்க்க வேண்டும். நண்பர்களை கூட நம்பாதீங்க. உஷாரா இருந்துக்கோங்க. யாரிடமாவது ஏமாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆசை வார்த்தை பேசி உங்களை மாற்ற நினைத்தால் கவிழ்ந்து விடாதீர்கள். பேராசை பெருநஷ்டமாக மாறிவிடும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு சந்தோஷமான நாளாக இருக்கும். நாள் முழுவதும் சிரித்துக் கொண்டே இருக்க போகிறீர்கள். குழந்தைகளால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். தடைப்பட்டு வந்த சுப காரிய பேச்சை மீண்டும் தொடங்குவீர்கள். இன்றைக்கு ஒரு இனிப்பு செய்தி உங்களுக்கு காத்துக் கொண்டிருக்கின்றது. நலம் தரும் இந்த நாளில் எல்லாம் நல்லதே நடக்கும்.
இதையும் படிக்க: வீட்டில் விளக்கு ஏற்றுவது ஏன் தெரியுமா..?