ஊமத்தையில் இவ்வளவு மருத்துவ பயன்களா..!!
கிராமங்களில் காணப்படும் பல இயற்கை மூலிகைகளில் ஊமத்தையும் ஒன்று.., நீண்ட வெள்ளை நிற பூவுடன் முட்கள் நிறைந்த காய்களுடன் காணப்படும். மலைப்பகுதிகளில் வளரும் இந்த ஊமத்தை நீல நிற இதழ்களுடன் அடுக்கடுக்காக காணப்படும்.
இது பார்ப்பதற்கு மட்டுமல்ல மருத்துவத்திலும் சிறப்பு பயன்கள் கொண்டுள்ளது. அதை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

காசநோய் : ஊமத்தை இலை அல்லது பூவை வெயிலில் காய வைக்க வேண்டும். காய்ந்த பின் அதை சுருட்டி, நெருப்பு பற்ற வைத்து புகையை உள் இழுத்தாள் காசநோய் குணமாகி விடும்.
புண்கள் : நீண்ட நாட்களாய் உடலில் காயங்கள் ஏற்பட்டு அது புண்ணாக மாறி சரியாகாமல் இருந்தால். 1/2 லிட்டர் தேங்காய் எண்ணையில், 1/2 லிட்டர் ஊமத்தை இலை சாற்றை சேர்த்து நன்கு நீர் வற்றும் அளவிற்கு காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும். பின் அது ஆறிய பிறகு, புண் உள்ள இடத்தில் தடவி வந்தால் சீக்கிரமே ஆறிவிடும்.
தேள், பூரான் கடித்தால் : தேள், பூரான் கடித்து விட்டால் அது பெரிய வீக்கமாக மாறிவிடும். அதை சரி செய்ய ஊமத்தன் இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து கொள்ளவும், வீக்கம் உள்ள இடத்தில் அதை தடவினால் வீக்கம் வற்றி விடும்.
தலைக்கு : ஊமத்தங்காயுடன் சிறிது நீர் சேர்த்து அரைத்து தலையில் தடவி குளிக்கவும். இப்படி ஒரு மாதம் செய்தால் பேன், பொடுகு நீங்கி தலை முடி வளரும்.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
-வெ.லோகேஸ்வரி