தழும்பை மறைக்க சிம்பிள் டிப்ஸ்..!!
சிலரின் உடலில் காணப்படும் தழும்பை மறைக்க ஆசைப்படுவது உண்டு, ஆனால் அது எப்படி செய்வது என்று தெரியாமல் பலரும் குழம்பி கொண்டு இருப்பார்கள். அதை எப்படி செய்யலாம் என்று ஒரு சிம்பிள் டிப்ஸ் உங்களுக்காக..
சரும பாரமரிப்பிற்காக நாம் பயன் படுத்தும் பொருட்களில் முக்கிய பங்கு வகிப்பது கோகோ பட்டர். கோகோ கொட்டையில் இருந்து எடுக்கப்படும் கொழுப்பு நிறைந்த மஞ்சள் பொருளே கோகோ பட்டர் என அழைக்கப்படுகிறது.
இதில் கொழுப்பு அமிலம், வைட்டமின் ஈ, சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. கால்சியம், ஜிங்க், மெக்னீசியம், இரும்பு, காப்பர் என பல தாதுப்பொருட்களும் நிறைந்துள்ளது.
கோகோ பட்டரில் உள்ள கொழுப்பு அமிலம் சருமத்தை ஈர பதத்துடன் வைத்துக்கொள்ள உதவுகிறது. சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்தை அளித்து சருமம் கெடாமல் பார்த்துக் கொள்கிறது.
தோல் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், கோகோ பட்டரில் தயார் செய்யப்பட்ட க்ரீம் பயன் படுத்தினால், விரைவாக ஆறிவிடும்.. அதை எப்படி தயார் செய்யலாம் என்பது பற்றி ஒரு சிறு குறிப்பு.
தேவையான பொருட்கள் :
கோகோ பட்டர் – 1 ஸ்பூன்,
தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன்,
சர்க்கரை – 3 ஸ்பூன்,
லவங்கப்பட்டை பொடி – 1 ஸ்பூன்.
தயார் செய்யும் முறை : தேங்காய் எண்ணெய் மற்றும் கோகோ பட்டரை மிதமான சூட்டில் உருக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு அதில் சர்க்கரை மற்றும் லவங்கப்பட்டை பொடியை சேர்க்க வேண்டும். பின் அதை ஒரு காற்று புகாத கண்ணாடி ஜாரில் மாற்றிக்கொள்ளவும்.
இந்த ஸ்கிரப்பை எடுத்து முகத்தில் பூசி மசாஜ் செய்ய வேண்டும். 20 நிமிடம் கழித்து, வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். முகம் கழுவிய பின் காட்டன் துணியால் துடைக்க வேண்டும்.
தழும்பு உள்ள இடத்தில் தினமும் பூசி வந்தால், நல்ல பலன் கிடைக்கும். இவ்வாறு வாரத்திற்கு இருமுறை செய்து வந்தால் அழகிய, பொலிவான சருமம் கிடைக்கும்.
மேலும் இதுபோன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
-வெ.லோகேஸ்வரி