வீட்ல மாவு இல்லனா கவலை வேண்டாம்..! இன்ஸ்டன்ட் இட்லி ரெடி பண்ணலாம்..!
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – மூன்று கப்
ரவை பாசிப்பருப்பு – தலா 1/4 கப்
புளித்த கெட்டி தயிர் – 2 கப்
உப்பு – தேவைக்கு
ஆப்ப சோடா – ஒரு சிட்டிகை
செய்முறை:
பாசிப்பருப்பை கழுவி ஊறவைத்து ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசி மாவு, பாசிப்பருப்பு மாவு, ரவை, தயிர், உப்பு மற்றும் ஆப்ப சோடா ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
பின் அந்த மாவினை அப்படியே 20 நிமிடங்களுக்கு ஊறவைக்க வேண்டும்.
பின் இட்லி தட்டில் இந்த மாவினை இட்லி குழியில் ஊற்றி பாத்திரத்தை மூடி 10 நிமிடங்களுக்கு வேகவைத்து எடுக்கவும்.
இதனுடன் சாம்பார் மற்றும் சட்னி சேர்த்து சாப்பிடலாம்.
இந்த மாவுடன் கேரட் துருவல், பீன்ஸ் ஆகியவற்றையும் எண்ணெயில் வதக்கி இதில் சேர்த்து இட்லி ஊற்றி சாப்பிடலாம் சுவையாக இருக்கும்.
அவ்வளவுதான் வீட்ல இட்லி மாவு இல்லனு கவலை வேண்டாம் இன்ஸ்டன்ட் இட்லி உடனே தயார் செய்யலாம்.