விருதுநகர் ஸ்பெஷல் மட்டன் சுக்கா..!
சின்னவெங்காயம் – 200 கிராம்
எலும்பில்லா மட்டன் – 200 கிராம்
இஞ்சி – 30 கிராம்
பூண்டு – 30 கிராம்
சீரகத்தூள் – 40 கிராம்
மிளகாய்த்தூள் – 20 கிராம்
நல்லெண்னெய் – 30 மில்லி
கொத்தமல்லி இலை – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
முதலில் மட்டன் மற்றும் வெங்காயத்தை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கிள்ளிய மிளகாய், கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
பின் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
பின் ஆட்டுகறியை சேர்த்து மிளகாய்த்தூள் தூவி சிறிது தண்ணீர் விட்டு நன்றாக கறியை வேக வைக்கவும்.
பின் அதில் சீரகத்தூள் தூவி, உப்பு சேர்த்து கிளறி கொத்தமல்லி தூவி இறக்கினால் போதும்.
அவ்ளோதான் விருதுநகர் ஸ்பெஷல் மட்டன் சுக்கா தயார்.
