எலுமிச்சை பழத்தை ஃபிரிஜ்ஜில் வைத்தாலும் நிறம் மாறுதா? அப்போ இப்படி ட்ரைப் பண்ணுங்க..!
எலுமிச்சை பழங்களை சேமித்து வைக்காத வீடே இருக்க முடியாது. ஆனால் விலை குறைவாக இருக்கும்போது நாம் எலுமிச்சை பழத்தை வாங்கி ஃபிரிஜ்ஜில் வைத்தாலும் அது சில நாட்களில் பழுப்பு நிறமாக மாறி கெட்டுபோகும். ஆனால் நான் இப்போ சொல்ல போகிற டிப்ஸை பயன்படுத்தி எலுமிச்சை பழத்த நீண்ட நாட்களுக்கு நிறம் மாறாமல் பாதுகாக்கலாம், அவை என்னவென்று இப்போ பார்ப்போம்.
காற்று புகாத ஒரு டப்பாவில் எலுமிச்சை பழங்களை சுத்தம் செய்து நீரை துடைத்து ஒரு பாலித்தீன் பையில் போட்டு இந்த டப்பாவில் வைத்து, பின் இதனை ஃபிரிஜ்ஜில் வைக்க வேண்டும்.
எலுமிச்சை பழத்தை சுத்தம் செய்து நீரை துடைத்து பின் அதன் மேல் எண்ணெயை தடவி ஒரு டப்பாவில் போட்டு ஃபிரிஜ்ஜில் வைக்கலாம்.
ஜிப்லாக் பைகளை எலுமிச்சை போட்டு வைக்க பயன்படுத்தலாம். இந்த பைகள் இப்போது கடைகளில் சுலபலாக கிடைக்கிறது.
அலுமினியம் ஃபாயில் பேப்பரை எலுமிச்சை பழங்களின் மேல் சுற்றி ஃபிரிஜ்ஜில் வைக்கலாம். அலுமினிய ஃபாயில் பேப்பர் அதில் இருக்கும் நீரை வெளியேற்றாமல் பழத்தை ஃபிர்ஷ்ஷாக வைத்திருக்கும்.