சுடச்சுட முட்டை மிளகு மசாலா..!
முட்டை 6
நல்லெண்ணெய் தேவையானது
கடுகு 1 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
வெங்காயம் 1 நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது
தக்காளி 2 நறுக்கியது
உப்பு தேவையானது
மஞ்சள்தூள் அரை ஸ்பூன்
தனியாத்தூள் 1 1/2 ஸ்பூன்
மிளகு தூள் 3 ஸ்பூன்
கொத்தமல்லி இலை சிறிது
ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,சீரகம் போட்டு பொரிக்கவும்.
பின் வெங்காயம் வதக்கி இஞ்சி பூண்டு விழுது கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பின்பு தக்காளி சேர்த்து வதக்கி உப்பு,தனியாத்தூள்,மஞ்சள்தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும்.
பின் முட்டையை உடைத்து ஊற்றி வதக்கி, கடைசியாக கொத்தமல்லி மற்றும் சிறிது மிளகுத்தூள் தூவி கிளறி இறக்கவும்.
அவ்வளவுதான் சுடச்சுட முட்டை மிளகு மசாலா தயார்.