இன்னிக்கு நைட் சிக்கன் கறி தோசை..!
தேவையான பொருட்கள்:
எண்ணெய் தேவையானது
வெங்காயம் 2
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது
பச்சை மிளகாய் 1 நறுக்கியது
தக்காளி 2 அரைத்தது
மஞ்சள்தூள் அரை ஸ்பூன்
மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
சீரகம் பொடி அரை ஸ்பூன்
மல்லித்தூள் 2 ஸ்பூன்
கரம் மசாலா 1 ஸ்பூன்
புதினா இலை சிறிது நறுக்கியது
கொத்தமல்லி இலை சிறிது நறுக்கியது
சிக்கன் அரை கிலோ (எலும்பில்லாதது)
உப்பு தேவையானது
தண்ணீர் அரை கப்
தோசை மாவு
முட்டை
செய்முறை:
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
பின் இஞ்சி பூண்டு விழுது,கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி பின் தக்காளி விழுது சேர்த்து வதக்க வேண்டும்.
அனைத்தும் வதங்கியதும் மசாலா வகைகளை எல்லாம் சேர்த்து வதக்க வேண்டும்
பின் புதினா, கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கி சிக்கன் துண்டுகளை சேர்த்து உப்பு போட்டு வதக்கி தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும்.
சிக்கன் வெந்து வந்ததும் இறக்க வேண்டும்.
தோசைக்கல்லில் தோசை ஊற்றி அதில் முட்டையை உடைத்து ஊற்றி வெந்ததும் தோசைக்கு நடுவில் சிக்கன் கறியை சிறிது வைத்து எண்ணெய் தடவி வெந்ததும் தட்டிற்கு மாற்றவும்.
அவ்வளவுதான் சிக்கன் கறி தோசை தயார்.