ராகி ரிப்பன் மிளகு பகோடா..!
தேவையான பொருட்கள்:
- 1 கப் ராகி மாவு
- 1/4 கப் அரிசி மாவு
- 1 டீஸ்பூன் ஓமம்
- 1 டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள்
- 3 டேபிள் ஸ்பூன் சூடான எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
- பொரிப்பதற்கு எண்ணெய்
செய்முறை:
முதலில் ராகி மாவையும் அரிசி மாவையும் நன்றாக சலித்து எடுத்துக் கொள்ளவும்.
பின் அதில் உப்பு, ஓமம், மிளகுத்தூள், சூடான எண்ணெய் மற்றும் கொஞ்சம் கொஞ்சமாக நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு தளத்தளவென பிசைந்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும்.
பின் ரிப்பன் பகோடா அச்சில் மாவை வைத்து எண்ணெயில் மாவை பிழிந்து விடவும்.
இருபுறமும் ரிப்பன் பகோடாவை வேகவைத்து எடுக்க வேண்டும்.
அவ்வளவுதான் ஆறியவுடன் சாப்பிடலாம்.
இப்போ ராகி ரிப்பன் மிளகு பகோடா தயார்.