கேரளா ஸ்டைல் வெளவால் மீன் வறுவல்..!
தேவையான பொருட்கள்:
கடலை மாவு – 2 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய்
கறிவேப்பிலை
மசாலா விழுது தயாரிக்க
இஞ்சி
பூண்டு
காஷ்மீரி ரெட் சில்லி – 4
உப்பு
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் – 1 தேக்கரண்டி
தண்ணீர்
செய்முறை:
ஒரு மிக்ஸியில் இஞ்சி,பூண்டு,நீரில் ஊறவைத்த சிவப்பு மிளகாய், உப்பு, மஞ்சள்தூள், மல்லித்தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த மசாலா விழுதில் கடலை மாவு கலந்துக் கொள்ளவும்.
வெளவால் மீனை சுத்தம் செய்து மீனின் சதைகளில் கீறல் போட்டு அதில் தயாரித்த மசாலா கலவையை மீனின் உடம்பில் தடவ வேண்டும்.
மசாலா தடவிய மீனை 1 மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்.
பின் தோசைக்கல்லில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் மீனை சேர்த்து பொன்னிறமாக இரு புறமும் பொரித்து எடுக்கவும்.
அவ்வளவுதான் சூடான வெளவால் மீன் வறுவல் தயார்.