”தி கோட்” திரைப்படத்தை பார்த்த விஜய்… என்ன சொன்னார் தெரியுமா..! அவசரப்பட்டு விட்டேன்..
நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ (கோட்) திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் சென்னை, கேரளா, ரஷ்யா என பல இடங்களில் நடந்து முடிந்துள்ளது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடந்துகொண்டிருக்க படத்தின் 3வது சிங்கிள் பாடலும் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்ப்பை பெற்றது.
இரண்டு வேடங்களில் நடிக்கும் இப்படம் வரும் செப்டம்பர் 5 தேதி திரையரங்கில் பிரமாண்டமாக வெளியாக உள்ள நிலையில் இதன் ட்ரைலர் வரும் ஆகஸ்ட் 19 தேது வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்தசூழலில் விஜய் தனது 68வது படமான கோட் படத்தின் முதல் காப்பியை பார்த்து தனது விமர்சனத்தை கூறியுள்ளார். படத்தை பார்த்த விஜய், வெங்கட் பிரபுவை கட்டிப்பிடித்து ”கலக்கிட்ட, அவசரப்பட்டு ஓய்வு அறிவித்துவிட்டேன், இன்னொரு படம் உன்னுடன் பண்ணிருக்கலாம்” கூறியுள்ளாராம்.
விஜய்யின் இந்த விமர்சனத்தை கேட்ட படக்குழு செம குஷியில் உள்ளனர். விஜயின் இந்த விமர்சனம் ரசிகர்களிடையே கோட் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
-பவானி கார்த்திக்