சத்தான சென்னா பாலக்கீரை சாதம்..!
சத்தான இந்த கொண்டக்கடலை பாலக்கீரை வைத்து சாதம் செய்யலாமா..
தேவையான பொருட்கள்:
கொண்டக்கடலை 1 கப் வேகவைத்தது
பாலக்கீரை 1 கப்
அரிசி 1 கப்
பச்சை மிளகாய் 2
வெங்காயம் 1
எண்ணெய் 2 ஸ்பூன்
கரம் மசாலா 1/2 ஸ்பூன்
பிரியாணி இலை 1
ஏலக்காய் 2
கிராம்பு 2
மல்லித்தூள் 1 ஸ்பூன்
உப்பு தேவையானது
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்
செய்முறை:
முதலில் கொண்டக்கடலையை வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பாலக்கீரையை கூழாக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு ஃபேனை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து தாளித்து பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.
அடுத்தது பாலக்கீரை விழுது சேர்த்து வதக்க வேண்டும்.
பின் வேகவைத்த கொண்டக்கடலை சேர்த்து கலந்து விட வேண்டும்.
பிறகு உப்பு, கொத்தமல்லித்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து கலந்து ஊறவைத்த அரிசி சேர்த்து வதக்கவும்.
பின் மூன்று கப் தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்துவிட்டு உப்பு சரிபார்த்து குக்கரை மூடி அடுப்பை சிம்மில் 15 நிமிடம் வேகவைக்கவும்.
பின் அடுப்பை அணைத்து குக்கரை அப்படியே ஆவி அடங்கும் வரை விட வேண்டும்.
பின் குக்கரை திறந்து கரண்டியை கொண்டு லேசாக கிண்டி விட வேண்டும்.
அவ்வளவுதான் சத்தான சென்னா பாலக்கீரை சாதம் தயார்.
இதுமாதிரி நான் சொன்ன மாதிரி செய்ங்க குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.
