மூளை மிளகு வறுவல்..!
தேவையான பொருட்கள்:
மூளை 2
மஞ்சள்தூள் கால் ஸ்பூன்
உப்பு தேவையானது
இஞ்சி பூண்டு விழுது இரண்டு ஸ்பூன்
மிளகுத்தூள் அரை ஸ்பூன்
சீரகத்தூள் அரை ஸ்பூன்
சோம்புதூள் கால் ஸ்பூன்
எண்ணெய் தேவையானது
கடுகு கால் ஸ்பூன்
கொத்தமல்லி இலை சிறிது
செய்முறை:
மூளையின் மேலே உள்ள மெல்லிய தோலை எடுத்துவிட்டு வடிகட்டியில் போட்டு 3 முறை அலசிக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு சேர்த்து பொரிந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
பின் அதில் மஞ்சள்தூள்,சீரகத்தூள்,சோம்புதூள், உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
பின் அதில் மூளையை போட்டு வதக்க வேண்டும். மூளை சிறிது நேரத்தில் வெந்துவிடும்,கடைசியாக கொத்தமல்லி இலை தூவி இறக்க வேண்டும்.