பரபரப்பான திருப்பூர் பல்லடம்..!! அதிரடியாக கைது செய்யப்பட்ட 3 பேர்..!!
பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 1100 கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள் பறிமுதல்.. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல்-3 பேர் கைது…..
திருப்பூர் மாவட்டத்தில் அதிகமாக கஞ்சா புழங்குவதாகவும் இதனால் அப்பகுதி மக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.., அதன் பேரில் நேற்று இரவு மங்கலம் அடுத்த பல்லடம் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்..
அப்போது சந்தேகம் விளைவிக்கும் வகையில் வாகனம் ஒன்று அந்த வழியே வந்துள்ளது. அந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது அதில் மூட்டை மூட்டையாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் கடத்திவரப்பட்டது தெரிய வந்தது. அதனையடுத்து வாகனத்தில் வந்த 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர் ஆனால் அவர்கள் அப்போது முன்னுக்குப் பின் முரணான பதில் அளித்துள்ளனர்..
அதனை தொடர்ந்து அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போது அவர்கள் பெங்களூரில் இருந்து குட்கா பொருட்களை மங்கலம் அருகே உள்ள குடோனுக்கு கடத்தி வந்தது தெரிய வந்தது. அதனையடுத்து குட்கா பொருட்களை கடத்தி வந்த மங்கலத்தைச் சேர்ந்த பக்ருதீன் (47)அப்துல் ரஹீம்(43). பொல்லிகாளி பாளையத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன்-(40) ஆகிய மூன்று பேரும் கைது செய்து போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் பறிமுதல் செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.. பல்லடம் அருகே 1100 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..