புதினா இலை புளிக்குழம்பு ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
புதினா இலைகள் 1 கப்
சின்ன வெங்காயம் 10
பூண்டு 10 பல்
புளி நெல்லிக்காய் அளவு
வெந்தயம் 1/4 ஸ்பூன்
கடுகு 1/4 ஸ்பூன்
கடலைபருப்பு 1/4 ஸ்பூன்
மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன்
சாம்பார் பொடி 3 ஸ்பூன்
பொடித்த வெல்லம் 1 ஸ்பூன்
நல்லெண்ணெய் 4 ஸ்பூன்
உப்பு தேவையானது
வறுத்து அரைக்க:
கடலைபருப்பு 1 ஸ்பூன்
வெள்ளை எள் 1/2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் 1
செய்முறை:
புளியை லேசாக சூடான நீர் கொண்டு ஊறவைத்து கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
புதினா இலைகளை நன்றாக நீரில் கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து சூடானதும் கடலைபருப்பு, வெள்ளை எள் மற்ரும் காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வறுத்து ஆறவைத்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து பின் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி பின் சுத்தம் செய்து வைத்துள்ள புதினா இலைகளை சேர்த்து வதக்கவும்.
இலைகள் நன்றாக வதங்கியதும் பின் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசல் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும்.
பின் மஞ்சள்தூள், சாம்பார்த்தூள் சேர்த்து மிதமான தீயில் கெட்டியாகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
கடைசியாக இதில் பொடித்த வெல்லம் மற்றும் அரைத்த பொடியை சேர்த்து கிளறிவிட்டு சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும்.
அவ்வளவுதான் சுவையான புதினா இலை புளிக்குழம்பு தயார்.
இதனை சூடான சாதத்தில் சேர்த்து பிசைந்து சாப்பிட சூப்பராக இருக்கும்.