கேரளா ஸ்டைல் கத்தரிக்காய் கறி ரெசிபி..!
கத்தரிக்காயை வைத்து கேரளா ஸ்டைலில் ஒரு கத்தரிக்காய் கறி செய்யலாமா வாங்க..
தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் 8
மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன்
உப்பு தேவையானது
தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன்
கறி செய்ய:
தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன்
கடுகு 1/2 ஸ்பூன்
சீரகம் 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது
பச்சை மிளகாய் 2 நறுக்கியது
சின்ன வெங்காயம் 1 கப்
மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன்
மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
தக்காளி 2 நறுக்கியது
தேங்காய் பால் 1/2 கப்
உப்பு தேவையானது
கொத்தமல்லி இலை சிறிது
செய்முறை:
முதலில் கத்தரிக்காயை நறுக்கி தண்ணீரில் போட வேண்டும்.
ஒரு ஃபேனை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய கத்தரிக்காய் சேர்த்து வதக்க வேண்டும்.
பின் இதில் மஞ்சள்தூள், உப்பு, ஆகியவற்றை சேர்த்து வதக்கி பின் தனியே வைக்கவும்.
ஒரு அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து பின் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய தக்காளி, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
அனைத்தும் நன்றாக வதங்கியதும் தேங்காய் பால் ஊற்றி கொள்ள வேண்டும்.
பின் இதில் வதக்கி வைத்துள்ள கத்தரிக்காயை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும்.
குழம்பு நன்றாக கெட்டியாக வந்ததும் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கலாம்.
அவ்வளவுதான் சூப்பரான கேரளா ஸ்டைல் கத்தரிக்காய் கறி தயார்.
இந்த குழம்பை சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.
