ஆரோக்கியமான காலை உணவு..! பாலக்கீரை ஆம்லெட்..!
தேவையான பொருட்கள்:
முட்டை 2
இஞ்சி 1 தூண்டு
மஞ்சள்தூள்
மிளகுத்தூள்
சீஸ்
கீரை 1 கப்
பச்சை மிளகாய் 1
மல்லி இலை 1/4 கப்
எண்ணெய்
உப்பு
செய்முறை:
கீரையை நன்றாக நீரில் அலசி சுத்தம் செய்து அதனை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
கொத்தமல்லி இலை மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கி மூன்றையும் ஒரு கிண்ணத்தில் போடவும்.
அதில் முட்டைகளை உடைத்து ஊற்றவும்.
பின் உப்பு, மஞ்சள்தூள், இஞ்சி ஆகியவற்றை சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
கடைசியாக இதில் துருவிய சீஸ் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
ஒரு ஃபேனை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவி சூடானதும் இந்த கலவையை ஊற்றி மிளகுத்தூள் தூவி மிதமான தீயில் வேகவைக்கவும்.
ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பிப்போட்டு வேகவைத்து எடுக்கவும்.
அவ்வளவுதான் ஆரோக்கியமான பாலக்கீரை ஆம்லெட் தயார்.
உங்கள் குழந்தைகள் கீரை சாப்பிடவில்லை என்றால் இதுமாதிரி ஆம்லெட்டில் சேர்த்து செய்து கொடுத்துடுங்க.