மட்டன் கீமா சமோசா.. ஸ்நாக்..!
சமோசா சீட் 7
மட்டன் 250 கிராம்
வெங்காயம் 3
பச்சை மிளகாய் 2
தனியா 1 கப்
கரம் மசாலா கால் ஸ்பூன்
மிளகாய்த்தூள் கால் ஸ்பூன்
தனியா தூள் அரை ஸ்பூன்
மஞ்சள்தூள் 1 1/2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி அதில் இஞ்சி பூண்டு விழுது,மசாலா வகைகளை சேர்த்து உப்பு கலந்து வதக்க வேண்டும்.
பின் அதில் மட்டன் கீமா சேர்த்து வதக்க வேண்டும்.மேலும் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
பின் இதில் கொத்தமல்லி இலைகளை சேர்த்து வதக்க வேண்டும்.
அனைத்தும் நன்றாக வெந்ததும் இதனை ஆற விடவும்.
பின் சமோசா சீட் எடுத்து முக்கோண வடிவில் மடித்து ஆறவைத்த மசாலாவை சிறிது வைத்து அந்த மூடி விட வேண்டும்.
ஒரு வாணலில் எண்ணெய் சூடு செய்து அதில் சமோசாவை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.