புளிப்பான மாங்காய் சாதம்..!
அரிசி 1 கப்
மாங்காய் 1
பச்சை மிளகாய் 10
பெருங்காயத்தூள் அரை ஸ்பூன்
மஞ்சள்தூள் 1 ஸ்பூன்
எண்ணெய் தேவையானது
கடுகு அரை ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
வேர்க்கடலை 1 ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது
உப்பு தேவையானது
ஒரு மிக்ஸியில் பச்சை மிளகாய்,பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதிக் கடுகு,உளுத்தம் பருப்பு,வேர்க்கடலை போட்டு தாளிக்க வேண்டும்.
பின் அதில் அரைத்த விழுது,கறிவேப்பிலை,கொத்தமல்லி இலை,வடித்த சாதம் போட்டு துருவிய மாங்காய் சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அவ்வளவுதான் புளிப்பான மாங்காய் சாதம் தயார்.