சத்தான ராஜ்மா மசாலா ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
ராஜ்மா 1 கப்
வெங்காயம் 2
தக்காளி 2
பச்சை மிளகாய் 1
இஞ்சி பூண்டு விழுது 1 1/2 ஸ்பூன்
நெய்
பிரியாணி இலை 1
சீரகம் 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் 1 ஸ்பூன்
கரம் மசாலா 1/2 ஸ்பூன்
மல்லித்தூள் 2 ஸ்பூன்
சீரகத்தூள் 1/2 ஸ்பூன்
உப்பு தேவையானது
கசூரி மேத்தி சிறிது
செய்முறை:
முதலில் ராஜ்மாவை நன்றாக நீரில் 4 முறை என கழுவிக் கொள்ள வேண்டும்.
பின் ராஜ்மா மூழ்கும் அளவிற்கு நீர் ஊற்றி 8 மணி நேரத்திற்கு ஊறவைக்க வேண்டும்.
பின் ஒரு குக்கரில் சேர்த்து ராஜ்மாவை போட்டு அதில் 1 கப் நீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து கலந்து 4 விசில் வரும் வரை வேகவைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு ஃபேனை அடுப்பில் வைத்து நெய் விட்டு சூடானதும் அதில் பிரியாணி இலை மற்றும் சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
அடுத்தது தக்காளியை அரைத்து விழுதாக சேர்த்து வதக்க வேண்டும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் மல்லித்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
மசாலா எண்ணெய் விரித்து வந்ததும் வேகவைத்த ராஜ்மாவை சேர்த்து கலந்துவிட்டு கிளறவும்.
உங்களுக்கு தேவையான அளவு நீர் விட்டு கலந்துவிட்டு கொதிக்க வைக்கவும்.
குழம்பு நன்றாக சுண்டி வந்ததும் கசூரி மேத்தியை கசக்கி தூவி விடவும்.
அவ்வளவுதான் சுவையான ராஜ்மா மசாலா தயார்.