கதம்ப சிறுதானியம் சூப்..!
தேவையானவை:
குதிரைவாலி
வரகு
சாமை
பாசிப்பருப்பு – தலா 50 கிராம்
தேங்காய்ப்பால் – ஒரு கப்
பூண்டு – 4 பல்
மிளகுத் தூள்
உப்பு – சுவைக்கேற்ப
கறிவேப்பிலை – சிறிதளவு
நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
சின்ன வெங்காயம் – 10
சீரகம் – அரை டீஸ்பூன்.
செய்முறை:
சிறுதானியங்கள் அனைத்தையும் கழுவி சுத்தம் செய்து நீரில் ஊற வைக்க வேண்டும்.
பின் ஊறிய சிறுதானியத்தில் பாசிப்பருப்பு சேர்த்து கஞ்சி பதத்திற்கு வேகவைக்க வேண்டும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய்,வெங்காயம்,பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதில் வேகவைத்த கஞ்சி சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
பின் அதில் தேங்காய்ப்பால் சேர்த்து,மிளகுத்தூள்,தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து சாப்பிடலாம்.