யாத்திரை மேற்கொண்ட சிவ பக்தர்கள்… மின்சாரம் தாக்கிய சோகம்.. பீகாரில் பரபரப்பு..!
பீகார் மாநிலம் வைஷாலி பகுதியில் சிவ பக்தர்கள் யாத்திரை மேற்கொள்வதற்காக கங்கை நீரை எடுத்து கொண்டு சோன்பூர் பாபா ஹைஹர்நாத் பகுதியில் வழிபாடு செய்வதற்காக ஷரனில் உள்ள பஹேலாஜா காட் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பக்தி பாடல் ஔிபரப்பாகிய டி.ஜே வாகனம் உயர் அழுத்த மின்சார கம்பியில் உரசியதில் வாகனத்தில் இருந்தவர்களில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு திவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த ஹாஜிபூர் காவல் நிலைய போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-பவானி கார்த்திக்