ஆரோக்கியமான ஓட்ஸ் இட்லி ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் 1 கப்
ரவா 1/2 கப்
தயிர் 1/4 கப்
தண்ணீர் 1 கப்
உப்பு தேவையானது
எலுமிச்சை சாறு 1/2 ஸ்பூன்
ஈனோ சால்ட் 1/2 ஸ்பூன்
கேரட் 1/2 ஸ்பூன் துருவியது
கடுகு 1/2 ஸ்பூன்
சீரகம் 1/2 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 ஸ்பூன்
கடலை பருப்பு 1/2 ஸ்பூன்
இஞ்சி 1/2 ஸ்பூன் நறுக்கியது
முந்திரி 4
எண்ணெய் 1 1/2 ஸ்பூன்
பெருங்காயத்தூள் 1 சிட்டிகை
கறிவேப்பிலை சிறிது
கொத்தமல்லி இலை சிறிது
செய்முறை:
ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கப் ஓட்ஸ் சேர்த்து அரைத்து தனியே எடுக்கவும்.
ஒரு ஃபேனில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியே வைக்கவும்.
பின் அதில் கடுகு,சீரகம் மற்றும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பிறகு நறுக்கிய இஞ்சி, பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
பின் இதில் ரவா சேர்த்து வறுக்க வேண்டும். பின் அரைத்த ஓட்ஸ் சேர்த்து வறுக்க வேண்டும்.
பிறகு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து வறுத்து தனியே வைக்கவும்.
நன்றாக ஆறியதும் அதில் தயிர் மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
மாவினை அப்படியே 10 நிமிடங்களுக்கு ஊறவைக்க வேண்டும்.
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.
இட்லி தட்டில் எண்ணெய் தடவி மாவு கெட்டியாக இருந்தால் எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் சிறிது சேர்த்து கலந்துக் கொள்ளலாம்.
இதில் ஈனோ சால்ட் சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக துருவிய கேரட், கொத்தமல்லி இலை ஆகியவற்றை சேர்த்து கலந்து இட்லி தட்டில் ஊற்றி ஒரு முந்திரி மேலே வைத்து 10 நிமிடங்களுக்கு வேகவைக்கவும்.
பின் ஆறியதும் இட்லியை தனியே எடுக்கவும்.
அவ்வளவுதான் ஆரோக்கியமான ஓட்ஸ் இட்லி தயார்.