லன்ச்க்கு கோவைக்காய் கறி செய்யலாமா..!
கோவக்காய் 250 கிராம்
எண்ணெய் தேவையானது
பட்டை,கிராம்பு,ஏலக்காய்
ஷாஹி ஜீரா அரை ஸ்பூன்
சோம்பு அரை ஸ்பூன்
வெங்காயம் 2 நறுக்கியது
தக்காளி 4
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்
தனியா தூள் 1 ஸ்பூன்
சீரகத்தூள் 1 ஸ்பூன்
வறுத்த வேர்க்கடலை கால் கப்
கரம் மசாலா தூள் 1 ஸ்பூன்
சர்க்கரை அரை ஸ்பூன்
இஞ்சி நறுக்கியது
பச்சை மிளகாய் நறுக்கியது
கசூரி மேத்தி
உப்பு
தண்ணீர்
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய கோவைக்காயை போட்டு 10 நிமிடங்களுக்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
பின் அதே வாணலில் தாளிப்பு பொருட்களை எல்லாம் போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.
பின் மசாலா வகைகளை எல்லாம் போட்டு உப்பு சேர்த்து வதக்கி பின் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
பின் வேர்க்கடலை பொடி மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வறுத்த கோவைக்காயை சேர்த்து பின் கரம் மசாலா, சர்க்கரை, இஞ்சி, மிளகாய் மற்றும் கசூரி மேத்தி சேர்த்து கலந்து இறக்க வேண்டும்.
இப்போ சுவையான கோவைக்காய் கறி தயார்.