ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..! சிக்கிய அடுத்த ஆதாரம்..!
கடந்த ஜூலை 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் 11பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, அருள், திருவேங்கடம் ராமு கொலைக்கு சதி திட்டம் தீட்டிய முன்னாள் பாஜக நிர்வாகி அஞ்சலை, முன்னாள் அதிமுக நிர்வாகி மலர்கொடி தமிழ் மாநில காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஹரிகரன் உள்ளிட்ட 15 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அதில் ரவுடி திருவேங்கடம் போலீஸ் கஸ்டடியை எடுத்து விசாரணை மேற்கொண்ட போது பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியை எடுப்பதற்காக சென்ற போது போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயற்சித்த போது “ரவுடி திருவங்கடத்தை” காவலர்கள் என்கவுண்டர் செய்தனர். அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் பயன்படுத்திய 6 செல்போன்கள் அதிமுக முன்னாள் நிர்வாகியும், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றிய குழு உறுப்பினருமான ஹரிதரனிடம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அதன் பெயரில் கடந்த ஜூலை 20ம் தேதி வெங்கத்தூர் கொசஸ்தலை ஆற்றில், மெரினா கடற்கரை மீட்புக் குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். முதல் நாள் நீரில் மூழ்கி தேடுதலில் ஈடுபட்டதில் 4 செல்போன்களின் பாகங்கள் மட்டும் தனித்தனியாக கிடைத்தது.
இரவு நேரம் தேடுதலைத் தள்ளி வைத்து நேற்று காலை மீண்டும் பணியைத் தொடங்கினர். சுமார் 6 மணி நேரம் தேடுதலுக்குப் பின் மேலும் மற்றொரு செல்போனின் பாகங்கள் கிடைக்கப்பெற்றது. அதனை தொடர்ந்து மீட்கப்பட்ட செல்போன்களை, தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதனையடுத்து தேடுதல் பணியை மீட்புக் குழுவினர் நிறைவு செய்தனர். கடந்த 2 நாட்களில் மீட்கப்பட்டுள்ள செல்போன்களின் ஐஎம்இஐ (IMEI number) எண்ணை கண்டுபிடிக்கும் நோக்கில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி கண்டுபிடித்தால் அந்த சிம்கார்டிற்கு எந்தெந்த எண்ணில் இருந்து கால் வந்துள்ளது. அதிலிருந்து எந்த எண்ணிற்கு கால் சென்றுள்ளது., போன்ற விவரங்களை எல்லாம் காவலர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..