குளுகுளு சாக்லேட் ஷேக் சன்டே செய்யலாமா…!
பிரெஷ் கிரீம் அரை கப்
செமி ஸ்வீட் டார்க் சாக்லேட் 200 கிராம்
கொழுப்புள்ள பால் 1 கப்
சாக்லேட் ஃப்ரவுனி
வால்நட்,பாதாம்,முந்திரி நறுக்கியது
ஓரியோ பிஸ்கட்
சாக்லேட் மில்க் ஷேக்
வெண்ணிலா ஐஸ் கிரீம்
சாக்லேட் வெபர் ஸ்டிக்ஸ்
முதலில் ஒரு பாத்திரத்தில் பிரெஷ் கிரீம்,செமி ஸ்வீட் சார்க் சாக்லேட் சேர்த்து மிதமான தீயில் கரையும் வரை கிளறவும்.
ஒரு மிக்ஸியில் பால் மற்றும் முன்பு செய்த கலவையை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
சாக்லேட் ஃப்ரவுனியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு டம்ளரில் சாக்லேட் ஃபிரவுனி,மிக்ஸியில் அடித்த கலவை,வால்நட்,பாதாம்,முந்திரி மற்றும் ஓரியோ பிஸ்கட் சேர்த்துக் கொள்ளவும்.
அதற்கு மேல் சாக்லேட் மில்க் ஷேக்,ஐஸ்கிரீம் சேர்க்கவும்.
மீண்டும் அதற்கு மேல் சாக்லேட் ஃபிரவுனி,மிக்ஸியில் அடித்த கலவை,வால்நட்,பாதாம்,முந்திரி மற்றும் ஓரியோ பிஸ்கட் சேர்த்துக் கொள்ளவும்.
இறுதியாக அதற்கு மேல் சாக்லேட் வெபர் ஸ்டிக்ஸ் வைக்கவும்.