ADVERTISEMENT
பாஜக கட்சியின் சார்பில் வாலாஜா நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகளை கண்டித்து பாஜக கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேருந்து நிலையம் அருகே பாஜக கட்சியின் சார்பில் வாலாஜா நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நகராட்சி நிர்வாகத்தில் நடைபெற்று வரும் முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் குறித்தும் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தராமல் இருப்பது குறித்து நகர மன்ற தலைவர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் முறையான பதில் அளிக்காமல் மக்களை அவமதிக்கும் விதமான செயல்களை கண்டித்து பாஜக கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.