இந்த ஆண்டின் சூரியகிரகணம்..!! இந்தியர்கள் கவனத்திற்கு..!!
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது, சூரியனை சந்திரன் மறைப்பதால் ஏற்படக்கூடிய நிகழ்வையே சூரிய கிரகணம் என்கிறார்கள். இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 8ம் தேதி அன்று ஏற்பட உள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு ஏற்படக்கூடிய சூரிய கிரகணம் மிகவும் அதிக அளவில் ஏற்படக்கூடும்
அதாவது, ஏப்ரல் 8ம் தேதி ஏற்படகூடிய. இந்த சூரிய கிரகணம் 4 மணி நேரம், 25 நிமிடங்கள் வரை நீடிக்க உள்ளது. இதற்கு முன் ஏற்பட்ட சூரிய கிரகணங்கள் இரண்டு மணி நேரத்திற்கும் குறைவாக ஏற்படும். ஆனால் இந்த ஆண்டு ஏற்படக்கூடிய சூரிய கிரகணம் பேர் விளைவை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக இருக்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளார்.
இந்திய நேரப்படி இந்த சூரிய கிரகண நிகழ்வானது, ஏப்ரல் 8ம் தேதி, இரவு 10:08 மணிக்கு தொடங்கி, ஏப்ரல் 9ம் தேதி, நள்ளிரவு 2:22 மணிக்கு நிறைவடைய உள்ளது. சூரிய கிரகணத்தின் உச்சம் ஏப்ரல் 8ம் தேதி இரவு 11:47 மணிக்கு வெளிப்படும்.
இந்த சூரிய கிரகணம் நிகழ்வானது, இந்திய நேரப்படி இரவு நேரத்தில் நிகழ்வதால், நம்மால் பார்க்க முடியாது. ஆனால் இந்த சூரிய கிரகணத்தை மெக்சிகோவில் சினாலோவா முதல் கோஹுயிலா வரையிலும், அமெரிக்காவின் டெக்ஸாஸ் முதல் மைனே வரையிலும், கனடாவின் ஒண்டாரியோ முதல் நியுபவுண்ட்லாண்ட் வரையிலும் வட அமெரிக்காவின் சில பகுதிகளிலும், மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் காண முடியும்.
பொதுவாக சூரியகிரகணம் இந்தியாவில் மாலை நேரங்களில் ஏற்படுவதால், தோஷங்கள் ஏற்படும் என சொல்லுவார்கள். அப்படி தோஷங்கள் ஏற்பட்டவுடன் சூரியகிரகணம் முடிந்த பின் வீட்டை சுத்தம் செய்து மாலையில் பூஜை செய்வது வழக்கம். ஆனால் இந்தமுறை சூரிய கிரகணம் இரவில் ஏற்படுவதால் இந்தியாவிற்கு தோஷங்கள் இல்லை என சொல்லுகின்றனர்.
சூரிய கிரகணத்தின் போது என்ன செய்யலாம்..? செய்யக்கூடாது..? எந்த இறைவனை வழிபட வேண்டும் என்பதை நாம் அடுத்த தொகுப்பில் பார்க்கலாம்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..