தமிழக பாஜகவை பற்றி பிரதமருக்கு புரியவில்லை..! முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து..!
மக்களவை மத்தியில் தமிழக அரசிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம்.., மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றில் முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியில் அவர் பேசியதாவது, நாடாளுமன்ற உரையில் தமிழ்நாடு சட்டப்பேரவை நடவடிக்கைகளை திரித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசி இருப்பது வருத்தம் அளிக்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் பற்றிய கேள்விகளுக்கு விளக்கம் கொடுத்த முதலமைச்சர்.., ஆளுநர் மாளிகை பாஜக மாளிகையாக மாற்றப்பட்டு விட்டதாகவும், அதில் முதலமைச்சர் ஆகிய எனக்கு அதிகாரமே இல்லை.., என கூறினார். ஆளுநர் ஆர்.என்.ரவி தேவையற்ற செயலில் ஈடுபடுவதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு தான் பாஜகவின் இலக்கு என பிரதமர் மோடி கூறியுள்ளார். தமிழ்நாட்டில் அதிமுகவிற்கு மாற்றாக பாஜாக வருமா என்ற கேள்விக்கு.., பிரதமர் மோடி தமிழ்நாடு பற்றியும்.., தமிழக பாஜக பற்றியும் எனக்கு தெரியாது என கூறியுள்ளார்.
மணிப்பூர் தீ ஓயாமல் எரிந்துக்கொண்டே இருக்கிறது. மணிப்பூர் அரசும் அது சம்மந்தமாக எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. பிரதமர் மோடி மணிப்பூருக்கு சென்று பார்வையிட வேண்டும் என நான் கேட்டுக்கொண்டேன்.
அதுமட்டுமின்றி பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் தற்போது உடைக்கப்பட்டது அதை பொருட் படுத்தாமல் 39 அமைச்சர்களுடன் பிரதமர் மோடி புகைப்படம் எடுத்து இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
Discussion about this post