நீட் விலக்கு தொடர்பாக தமிழக அரசு அனுப்பிய மசோதாவில் ஒருபோதும் ஒப்புதல் தெரிவித்து கையெழுத்திட மாட்டேன் என ஆளுநர் ஆர். என்.ரவி அறிவித்துள்ளார்.
‘எண்ணித் துணிக’ என்ற தலைப்பில் நீட் இளநிலை தேர்வு 2023ல் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுடன் ஆளுநர் ரவி கலந்துரையாடினார்.
அப்போது பேசிய அவர், நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது மாணவர்களின் போட்டி போடும் திறனை கேள்விக்குறியாக்கும் என்றும் எனவே ஒரு போதும் நீட் விலக்கு தொடர்பாக தமிழக அரசு அனுப்பிய மசோதாவில் ஒருபோதும் ஒப்புதல் தெரிவித்து கையெழுத்திட மாட்டேன் என்றும் தெரிவித்தார். மேலும் நீட் தேர்விற்கு கோச்சிங் சென்டர் சென்று பயில வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார்.
நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தர மாட்டேன் என ஆளுநர் ரவி பிடிவாதமாக கூறியதற்கு பெற்றோர் நேருக்கு நேர் எதிர்ப்பு தெரிவித்தனர். நீட் தேர்வு இல்லாமலேயே தமிழ்நாடு மருத்துவக் கல்வியில் சிறந்து விளங்குவதாக ஆளுநருக்கு பெற்றோர் நேருக்கு நேர் பதிலடி கொடுத்தனர்.