பழைய சட்டங்கள் புது இந்தி பெயரில் குற்றவியல் சட்டங்களாக அறிவித்த அமித்ஷா..!!
பழைய சட்டங்கள் புது இந்தி பெயரில் மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்களை அமித்ஷா தாக்கல் செய்துள்ளார். இந்திய தண்டனை சட்டம், கிரிமினல் குற்றவியல் நடைமுறை சட்டம், மற்றும் இந்திய சான்றிதழ் சட்டம் என மூன்று மசோதாக்களை அறிமுக படுத்தியுள்ளார்.
புதிய மசோதாவில் தேசத்துரோக சட்டத்தை ரத்து செய்யும் வழிகள் இருக்கின்றன, சில குற்றங்களை செய்வோருக்கு.., சேவையில் ஈடுபடச் செய்யவும் விதிகள் இருக்கின்றன. பிரிவினைவாத செயல்கள், ஆயுத கிளர்ச்சி மற்றும் நாட்டின் இறையாண்மை, நாட்டிற்கு முரண்பாடான செயலில் ஈடுபடுவது, மற்றவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவது. உட்பட பல குற்றங்கள் பட்டியலிடப் பட்டுள்ளன.
கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் ரீதியாக துன்புறுத்துவது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 20 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க வேலை வாங்கி தருவதாகவோ அல்லது வெளிநாடு மற்றும் தனியார் துறையில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றினால் குற்றமாக கருதப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.
வன்முறையால் கொலை செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை முதல் கொலை மரண தண்டனை வரை விதிக்கப்படும். என புதிய சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. இந்த குற்றங்களால் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரண நிதியும் வழங்கப்படும் மேலும் குற்றம் செய்தவருக்கு 3 ஆண்டுக்குள் தண்டனையும் விதிக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
Discussion about this post