குஜராத் மாநிலத்தில் முதற்கட்ட சட்டசபை தேர்தல் நேற்று காலை தொடங்கியது. மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நடைபெற்ற இந்த தேர்தல் நேற்று மாலை நிறைவடைந்தது. மும்முனை போட்டியான இந்த தேர்தலின் முடிவுகள் நாடாளுமன்ற முடிவுகளை பிரதிபலிக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
தேசிய தலைவர்கள் கடந்த ஒரு மாத காலமாக மும்முரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர் பிஜேபி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மோடி,அமித்ஷா உள்ளிட்டோர் வாக்கு சேகரித்தனர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்த முறை புதிதாக வருகை தரும் ஆம் ஆத்மீ கட்சின் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்கு சேகரித்தார்.
செவ்வாய் கிழமை மாலை முதற்கட்ட வாக்கு சேகரிக்கும் பிரச்சாரம் நிறைவடைந்த நிலையில் நேற்று 89 தொகுதில்களில் 14 ஆயிரத்து 382 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு தொடங்கிய முதலே மந்தமான சூழல் நிலவியது. 5 மணிக்கு தேர்தல் நிறைவடைந்த நிலையில் நாள் முடிவில் 56.88 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த கட்ட தேர்தல் 5ம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில் தேசிய தலைவர்கள் குஜராத்தில் முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். தேர்தலின் முடிவுகள் வரும் 8ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.