பேரன் இறந்த அதிர்ச்சியில் மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்..!
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அயனாவரம் காலனியை சேர்ந்த நாசர் அலி என்பவரின் மகன் ஷாஜகான் (22). கூலி தொழிலாளியான இவருக்கும், தஞ்சாவூரைச் சேர்ந்த பாத்திமாவுக்கும் (22) கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
பின்னர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுப்பாடு காரணமாக இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்ப்பட்டு வந்துள்ளது. அதன்பின், கர்ப்பமாக இருந்த பாத்திமா, கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு பாத்திமாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், இது குறித்து ஷாஜகானிடம் பாத்திமா தெரிவிக்காததால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். மேலும் பலமுறை பாத்திமாவை சந்திக்க ஷஜகான் சென்றபோது அவர் சந்திக்க மறுத்துள்ளார்.
இதனால், விரக்தியில் நேற்று வீட்டில் யாரும் இல்லாததால் தற்கொலை செய்து உயிரை மாய்த்து கொண்டார். பின்னர் விட்டிற்கு வந்த அவரது உறவினர்கள் ஷஜகான் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி துடித்தனர்.
அப்போது பேரன் இறந்த அதிர்ச்சியில் கதறி அழுத ஷாஜகானின் பாட்டி அமீனா (75) மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். பேரன் இறந்த அதிர்ச்சியில் பாட்டி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”