உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தபடும் செயலி என்றால் அது வாட்ஸ்அப் தான். ஸ்மார்ட் போன் இருக்கிறது என்றால் கட்டாயம் அதில் வாட்ஸ்அப் இருக்கும் அந்த அளவிற்கு பிரபலம் செயலியில் முக்கியமான ஒன்று வாட்ஸ்அப் காலிங் என்ற வசதி.
பெரும்பாலான பயனாளர்கள் வாட்ஸ்அப் காலிங் என்பதை வழக்கமாக பயனபடுத்தி வருகின்றனர். ஏனெனில் இந்த வசதிக்கு இதுவரை எந்த ஒரு கட்டணமும் வசூலிக்கபடாதது முக்கிய காரணமாக இருக்கிறது. யாரேனும் சிம் க்கு ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் ஒருவரை தொடர்பு கொள்ள வாட்ஸ்அப் காலிங்கை பயன்படுத்துவார்கள். மேலும் இந்த வசதி மூலம் ஒரே நேரத்தில் பலருடன் பேசவும் முடியும் என்பது கூடுதல் சிறப்பு இதனால்தான் இந்த வசதி மக்களிடம் மிகவும் பிரபலமாக உள்ளது.
இந்நிலையில் வாட்ஸ்அப் காலிங்ற்கு கட்டணம் வசூலிக்கபட உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இதனால் வாட்ஸ்அப் காலிங்கை பயன்ப்படுத்துபவர்களிடம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதுவரை இந்த செய்தி அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது ஆறுதல் தகவல். இதுபோன்ற பல சமூக வலைத்தளங்கள் பல மாற்றங்களை நிகழ்த்தி வருவதால் அதன் பயனாளர்களுக்கு தொடர்ந்து அதிர்ச்சிகளை கொடுத்து வருகிறது
Discussion about this post