அமேசானில் ஏர் பிரையர் ஆர்டர்..! பார்சலில் வந்த அதிர்ச்சி..!
ஆன்லைனில் ஆர்டர் செய்தால் நாம் ஆர்டர் செய்வது ஒன்று நமக்கு வந்து சேரும் பொருள் ஒன்று என்று சொல்வதை போல தற்போது சில ஆன்லைன் டெலிவரி அப்படி தான் இருக்கிறது.. கடந்த சில நாட்களாக ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருளுக்கு பதில் பூச்சி மற்றும் பாம்பு போன்றவை டெலிவரி ஆவது வாடிக்கையாகி விட்டது.. அப்படி தான் இங்கே ஒரு செயல் நடந்துள்ளது.
கொலம்பியாவை சேர்ந்த சோபியா சொரோனா என்ற பெண் கடந்த சில தினங்களுக்கு முன் அமேசானில் ஏர் பிரையர் ஆர்டர் செய்துள்ளார். அதன் டெலிவரி இன்று காலை வந்துள்ளது.. ஆனால் அதை திறந்து பார்த்தபோது பெண்ணுக்கு பேர் அதிர்ச்சி காத்திருந்தது.
டெலிவரி வந்த பார்சலில் ஏர் பிரையர் இருக்கும் என அந்த பெண் ஆசை ஆசையாக திறக்க அதில் பல்லி இருந்ததை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்..
இதனை போட்டோவாக எடுத்து சமூக வலைத்தளமான எக்ஸ் வலைத்தளம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். அந்த ட்வீட் 4.1மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
மேலும் அந்த பல்லியானது ஸ்பானீஷ் பாறை பல்லி என்பதால் இது அமேசான் நிறுவனத்தின் தவறா அல்லது கொரியர் டெலிவரி செய்தவர்களின் தவறா என பதிவிட்டுள்ளார்.., தற்போது இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. அதற்கு பல்வேறு வாடிக்கையாளர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..