நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் பொங்கலுக்கு அஜித்தின் துணிவு படத்துடன் போட்டி போட உள்ளது. இந்நிலையில் விஜய் நடிக்கும் அடுத்த படமான தளபதி 67 க்கு கடந்த ஒரு வருடமாகவே மிக பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
அவ்வப்போது தளபதி 67 குறித்து அதிகார்வபூர்வமின்றி தகவல்கள் வெளியாகி ட்ரெண்ட் ஆகி வருவது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜயின் கூட்டணியில் மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது படமாக உருவாக இருக்கும் இப்படத்திற்கு இவ்வளவு எதிர்பார்ப்பு இருப்பதற்கு லோகேஷின் யூனிவெர்ஸ் கதைகள் தான். விஜயும் அந்த யூனிவெர்சில் இணைவாரா என்று தான் சினிமா ரசிகர்கள் எதிரிபார்த்து கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில், தளபதி 67ல் விஜய்க்கு 6 வில்லன்கள் இருப்பதாகவும் அதற்கான காதாபாத்திரங்களுக்கு தகுந்த நடிகர்களை இயக்குனர் தேடி வருகிறார் என்று தகவல் வரும் நிலையில், இதில் ஒரு கதாபாத்திரத்திற்காக நவரச நாயகன் கார்த்திகை லோகேஸ் கனகராஜ் அணுகியுள்ளார்.ஆனால், கடந்த சில வருடங்களாக தொடர் கால்வலியால் அவதிப்படும் வரும் நடிகர் கார்த்திக் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம். உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.