இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாட வங்கதேசம் சென்றுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் சீனியர் பந்துவீச்சாளரான மொஹம்மத் ஷமி காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.
வங்கதேசம் சென்றுள்ள இந்தியா அணி நாளை முதல் ஒரு நாள் போட்டியில் விளையாட உள்ளது. அதற்கான தீவிர பயிற்சியில் இந்திய அணியின் வீரர்கள் ஈடுபட்டு வருகிறன்றனர். இந்நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சாளரான மொஹம்மத் சமி கை யில் காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியாகியுள்ளது ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து அவருக்கான மாற்று வீரரை பிசிசிஐ அறிவித்துள்ளது.
நாளை காலை முதல் ஒரு நாள் போட்டி நடைபெறவுள்ளது இந்த தொடரில் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுகிறார். மொஹம்மத் ஷமி க்கு பதிலாக காஸ்மீரை சேர்ந்த வேக பந்துவீச்சாளர் உம்ரன் மாலிக்கை தேர்ந்தெடுத்துள்ளது இந்தியா அணி. இருப்பினும் அனுபவம் வாய்ந்த முகமத் ஷமி தொடரிலிருந்து வெளியேறியது இந்தியா அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.